பாகுபாட்டை ஒழிக்க ஆசிரியர்கள், காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி!!
6 ஆடி 2026 திங்கள் 22:17 | பார்வைகள் : 1973
பாகுபாடுகளை எதிர்க்கும் பொறுப்பான அமைச்சர் Aurore Bergé, இன்று, இனவெறி, யூத விரோதம் மற்றும் பிறப்பிட அடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்க்கும் 55 நடவடிக்கைகள் கொண்ட மூன்று ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டார்.
பயிற்சி, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தத் திட்டம், பரிஸில் உள்ள பிரான்ஸ் தேசிய நூலகத்தில் (Bibliothèque nationale de France) வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய சட்ட மசோதாவை அவர் புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.2023 ஜனவரியில் அப்போதைய பிரதமர் எலிசபெத் போர்ன் (Élisabeth Borne) முதல் மூன்று ஆண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால், தேசிய மனித உரிமைகள் ஆலோசனை ஆணையம் (CNCDH) கடந்த மார்ச் மாதம் அதை "மிகவும் போதியதல்ல" என்று விமர்சித்தது.
புதிய திட்டம் கடந்த ஆறு மாதங்களாக சமூக அமைப்புகள், CNCDH, Défenseur des droits (குடிமக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு) மற்றும் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினருக்கு கூடுதல் பயிற்சி
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- பாடசாலை தலைமை ஆசிரியர்கள், கல்வி ஆய்வாளர்கள் மற்றும் எதிர்கால ஆசிரியர்களுக்கு பாகுபாடு எதிர்ப்பு பயிற்சி வழங்கப்படும்.
- ஆண்டுதோறும் 800 000 மாணவர்கள் நினைவிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் (தற்போது 500 000).
- காவல்துறையினர் மற்றும் ஜெண்டார்ம்களுக்கு (Gendarmerie) கூடுதல் பயிற்சி வழங்கப்படும்.
- புகார் அளிக்கும் நபர்களுக்கான வழிகாட்டி வெளியிடப்படும்.
- இனவெறி மற்றும் யூத விரோத குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு கண்காணிக்கப்படும்.
- இனவெறி கருத்துகளை வெளியிடுபவர்களுக்கு நினைவிடங்களில் நடைபெறும் குடியுரிமைப் பயிற்சி தண்டனையாக விரிவுபடுத்தப்படும்.
- வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பில் பாகுபாடு உள்ளதா என்பதை அறிய, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை (சோதனை ஆட்சேர்ப்பு ஆய்வு) நடத்தப்படும்.
- நிலச்சொத்து (ரியல் எஸ்டேட்) துறையினருக்கு பாகுபாடற்ற சேவைகள் வழங்குவதற்கான பயிற்சி வழிகாட்டி உருவாக்கப்படும்.
- பணியாளர் தேர்வில் அல்கோரிதம் சார்ந்த பாகுபாடுகளைத் தவிர்க்கும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கப்படும்.
இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க, அமைச்சரவை அளவிலான குழு அமைக்கப்படும். மேலும், CNCDH ஆண்டுதோறும் இந்தத் திட்டத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்யும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire