Paristamil Navigation Paristamil advert login

மேகதாது பிரச்னைக்கு மத்திய அரசே காரணம்: வைகோ கண்டுபிடிப்பு

மேகதாது பிரச்னைக்கு மத்திய அரசே காரணம்: வைகோ கண்டுபிடிப்பு

7 ஆடி 2026 செவ்வாய் 09:35 | பார்வைகள் : 834


மேகதாது அணை  விவகாரத்தில் முக்கிய 'வில்லன்' மத்திய அரசு தான். என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 1960ல், தவறான ஆலோசனையால், தென் ஆப்ரிக்கா, நைஜீரியா நாடுகளில் இருந்து சீமைக்கருவேல விதைகள், இங்கு கொண்டு வரப்பட்டு விதைக்கப்பட்டன.

சீமைக்கருவேல மரங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுவரை, தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றியுள்ளேன். அவற்றை முழுமையாக அகற்ற தமிழக அரசுக்கு, 19 உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

காவிரியின் குறுக்கே, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்தின் 25 மாவட்டங்களில் குடிநீருக்கு கடுமையான பிரச்னை ஏற்படும். இந்த விவகாரத்தில் முக்கிய 'வில்லன்' மத்திய அரசு தான். காவிரியின் குறுக்கே மேக தாதுவில்  கர்நாடக அரசு, அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது. அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தால், அது இந்திய ஒருமைப் பாட்டையே பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3