தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தம்: மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் வலியுறுத்தல்
7 ஆடி 2026 செவ்வாய் 12:43 | பார்வைகள் : 304
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ல் மத்திய அரசு முன்மொழிந்த சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த சட்ட திருத்தம் ஏழை குடும்பங்களை சென்றடையும் உணவு தானியங்களின் அளவை கணிசமாக குறைக்கும். இந்தத் திருத்தங்கள் தமிழக மக்களை பாதிக்கும். தற்போது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை கருதாமல்35 கிலோ உணவு தானியஙக்கள் வழங்கப்படுகிறது.
முன்மொழியப்பட்ட திருத்தத்தில் நபருக்கு 7 கிலோ என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்படும்.தமிழகத்தில் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்க 3.56 ஆக உள்ளதால் குடும்பங்களுக்கான தானிய அளவை குறைக்கும். தமிழகத்தில் தற்போது 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.
தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தால் தமிழகத்தில் 70 லட்சம் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire