Paristamil Navigation Paristamil advert login

த.வெ.க.,வுடன் நெருங்க வேண்டாம்: அன்புமணிக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை

த.வெ.க.,வுடன் நெருங்க வேண்டாம்: அன்புமணிக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை

8 ஆடி 2026 புதன் 12:12 | பார்வைகள் : 108


முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் குடைச்சல் கொடுப்பதால், அதை சமாளிக்க, பா.ம.க.,வுடன் த.வெ.க., நெருங்கி வருகிறது.

நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக, அமைச்சர் ஆனந்தை, நேற்று முன்தினம் பா.ம.க., தலைவர் அன்புமணி சந்தித்தார்.

இதையடுத்து, த.வெ.க., -- பா.ம.க., இடையே நட்பு மலர்ந்துள்ளது. ஆனால், 'த.வெ.க.,வுடன் நெருங்கினால், வன்னியர் சமுதாய ஓட்டு வங்கியில் சேதாரம் ஏற்படும்' என, பா.ம.க.,வுக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடைந்தாலும், நான்கு இடங்களில் பா.ம.க., வென்றது. இந்நிலையில், முதல்வர் விஜயுடன் பா.ம.க., நெருங்கினால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயால் ஈர்க்கப்படுவர்.

சிறுபான்மையினர், பட்டியலின ஓட்டுகளை போலவே, வன்னியர் ஓட்டுகளையும் குறி வைத்து, த.வெ.க., செயல்படுகிறது. இதனால், பா.ம.க.,வுக்கு கிடைக்கும் வன்னியர் ஓட்டுகளில் சேதாரம் ஏற்பட வாய்ப்புள்ளது.

'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தபோது, வன்னியர் சமுதாயத்தினர், ஆர்.எஸ்.எஸ்., பக்கம் செல்வதை தடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எச்சரித்ததை, அன்புமணி நினைவில் கொள்ள வேண்டும். வன்னியர் ஓட்டு வங்கியை, த.வெ.க.,விடம் கொஞ்சம் கூட இழந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.