அதி உச்ச வெப்ப அலை - 67 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
8 ஆடி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 2487
கடுமையான வெப்ப அலை காரணமாக, புதன்கிழமைக்கான புதிய அறிவிப்பில் 67 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Météo-France அறிவித்துள்ளது. புதிதாக Bouches-du-Rhône, Ain, Jura, Doubs, Eure மற்றும் Orne ஆகிய ஆறு மாவட்டங்கள் இந்த எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் வடபகுதி, côtes de la Manche, கிழக்குப் பகுதியின் சில மாவட்டங்கள் மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை நிலைகளில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வெப்ப அலை வார இறுதி வரை அல்லது அதற்கும் அப்பால் நீடிக்கக்கூடும் என Météo-France எச்சரித்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் பதிவான கடுமையான வெப்பநிலை, நாட்டின் வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான காலங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.
இதனிடையே, அதிக வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக காட்டுத் தீ அபாயமும் அதிகரித்துள்ளது. Essonne, Deux-Sèvres மற்றும் Vaucluse பகுதிகள் மிகவும் உயர்ந்த அபாய நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், புதன்கிழமை Aude, Hérault, Gard, Vaucluse மற்றும் Drôme ஆகிய மாவட்டங்களும் அதி உயர்ந்த ஆபத்து பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், Pyrénées-Orientales பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், Tour de France போட்டியும் பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire