Paristamil Navigation Paristamil advert login

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா - மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா - மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

8 ஆடி 2026 புதன் 08:51 | பார்வைகள் : 1141


அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (US CENTCOM) புதன்கிழமை (08) ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுகிறது.

வெளிநாட்டு ஊடகங்களின்படி, செவ்வாய்க்கிழமை 07.07.2026 ஹோர்முஸ் நீரிணை மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் ஹர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

 இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஈரானின் ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு, ஆயுத கிடங்குகள் உள்பட 80 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3