Paristamil Navigation Paristamil advert login

எகிப்தை 3-2 என வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்குத் தகுதி

எகிப்தை 3-2 என வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்குத் தகுதி

8 ஆடி 2026 புதன் 07:59 | பார்வைகள் : 779


2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் சுற்று 16இல் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் எகிப்து அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுத்ததுடன், 67ஆவது நிமிடத்தில் மொஸ்தாபா சிகோ இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டார்.

அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி 83ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்று அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்ததுடன், கிறிஸ்டியன் ரொமேரோ 79ஆவது நிமிடத்திலும், மேலதிக நேரத்தின் (90+3) போது என்சோ பெர்னாண்டஸ் பெற்றுக்கொண்ட வெற்றிக் கோலுடனும் ஆர்ஜென்டீனா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.

இதற்கமைய, அர்ஜென்டினா அணி 2026 பீபா உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.