Paristamil Navigation Paristamil advert login

கலவரத்தின் பின் நீர்கொழும்பு சிறை கைதிகளில் 60 பேர் யாழ் சிறைக்கு இடமாற்றம்

கலவரத்தின் பின் நீர்கொழும்பு சிறை கைதிகளில் 60 பேர் யாழ் சிறைக்கு இடமாற்றம்

8 ஆடி 2026 புதன் 13:53 | பார்வைகள் : 1033


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று (07) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதோடு, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக, அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நீர்கொழும்பு சிறையிலுள்ள கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த அவசர இடமாற்ற நடவடிக்கையின் அடிப்படையிலேயே, பலத்த பாதுகாப்புடன் குறித்த 60 கைதிகளும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.