திமுக, அதிமுக இரண்டும் தேய்ந்து கொண்டே போகிறது; அமைச்சர் நிர்மல்குமார்
9 ஆடி 2026 வியாழன் 09:02 | பார்வைகள் : 901
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேய்ந்து கொண்டே போகிறது. விரைவில் இவ்விரு கட்சிகளிலும் ஆளே இல்லாமல் இருக்க போகிறது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவரது பேட்டி;
முதல்வர் கரூர் செல்கிறார் என்றவுடன் இவர்களுக்கு (திமுக) ஏன் பயம். அமைச்சர் ஆதவிடம் சிபிஐ என்ன விசாரிக்க வேண்டும் என்று மனு கொடுத்து உள்ளீர்கள். எந்த விதத்திலாவது அவர்(முதல்வர் விஜய்) கரூர் செல்வதை தடுக்க வேண்டும்.
இப்போதே இவ்வளவு மனு போடுகின்றனர். கடந்தாண்டு கரூர் சம்பவத்தின் போதே முதல்வர் கரூர் பயணத்தை இவர்கள் எவ்வளவு சீரியசாக எடுத்திருப்பார்கள்.
எதனால் கரூருக்குள் அவர் போக வேண்டாம் என்று நினைக்கிறார்கள், அங்கு போனால் என்ன நடக்கும் என்று நினைக்கிறார்கள். சிபிஐ விசாரணை செய்து கொண்டு வருகிறது. இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கை வைத்து, முதல்வரை முடக்க பார்த்தார்கள். ஒரு வாரமாக கட்சியை, எங்கள் முதல்வரை முடக்கவும் முயற்சித்தனர். அனைத்திலும் தோற்றுபோய் விட்டனர். இவர்கள் தானே சிபிஐ வேண்டாம் என்றனர். இப்போது அங்கே போய் மனு தருகின்றனர்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டது. இன்றைக்கு இந்த இரண்டு கட்சிகளும் தேய்ந்து கொண்டே போகிறது. இவர்கள் கட்சியில் இனி ஆட்களே இல்லாமல் இருக்க போகிறது.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire