Paristamil Navigation Paristamil advert login

ஊழல் முதலைகளுக்கு சீமான் ஆதரவு; அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு

ஊழல் முதலைகளுக்கு சீமான் ஆதரவு; அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு

9 ஆடி 2026 வியாழன் 14:15 | பார்வைகள் : 886


தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை ஊழலில் பெருமுதலைகள் வெளியே வருவது பிடிக்காமல் சீமான் ஆதரவாக பேசுவது போல் தெரிகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் விஜயின் அறிவுறுத்தலின் படி, அமரிக்காவில் பெட்னாவின் ஆண்டு விழாவில் சிறப்பாக பங்கேற்று, அந்த விழாவை சிறப்பித்ததோடு மட்டுமல்லாது மீண்டும் உலக தமிழர் மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனையை மேற்கொண்டேன். வெற்றிகரமாக அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து வந்து இருக்கிறேன்.

இந்த பொன்னான வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆய்வு பணி என்பது காலம் காலமாக நடைபெறுவது தான். அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆய்வு செய்வது மரபு தான். அமைச்சர் வீடியோ எதுவும் எடுக்கவில்லை. அவரே தமிழ் வழியில் படித்தவர். இன்று ஆங்கிலத்தில் பேசக்கூடிய தனி திறமையை வளர்த்துக்கொண்ட அரசியல் ஆளுமை தான். ஆய்வுகள் என்பதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது.

தனியார் பள்ளிகள் காசு கொடுத்ததை தடுத்து, பல்லாயிரம் கோடி ஊழல் தடுக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கான அனுகூலமாக பார்க்க கூடாது. அந்த பார்வை தவறு. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக தான் பார்க்க வேண்டும். அரசு பள்ளிகள் தான் என்னுடைய கண்கள். தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை ஊழலில் பெருமுதலைகள் வெளியே வருவது பிடிக்காமல் சீமான் ஆதரவாக பேசுவது போல் தெரிகிறது. இவ்வாறு  ராஜ்மோகன் கூறினார்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்