Paristamil Navigation Paristamil advert login

ஜூலை 14 பட்டாசுகளுக்கு பதிலாக ட்ரோன் ஒளிக்காட்சிகள்!!

ஜூலை 14 பட்டாசுகளுக்கு பதிலாக ட்ரோன் ஒளிக்காட்சிகள்!!

9 ஆடி 2026 வியாழன் 20:49 | பார்வைகள் : 2705


ஜூலை 14 தேசிய தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நகராட்சிகள் பட்டாசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன. கடுமையான வெப்ப அலை, மண் வறட்சி மற்றும் அதிகரித்துள்ள காட்டுத்தீ அபாயம் காரணமாக, சில மாவட்டங்களில் Préfecture அனைத்து பட்டாசு வெடிப்புகளுக்கும் தடை விதித்துள்ளது.

Hérault, Gironde, Ain, Loir-et-Cher மற்றும் Essonne உள்ளிட்ட பல மாவட்டங்களில் பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில நகராட்சிகள், தீ அபாயம் இல்லாத மாற்று நிகழ்ச்சியாக ட்ரோன் ஒளிக்காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன.

பட்டாசுகளை முழுமையாகத் தடை செய்யாத சில மாவட்டங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன. உதாரணமாக, Aube மாவட்டத்தில், பட்டாசு வெடிக்கும் இடத்தை முன்கூட்டியே தண்ணீரால் நனைத்தல் மற்றும் அருகில் தீயணைப்புக்கான நீர் வசதி வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய காட்டுத்தீ தகவல் அமைப்பின் (EFFIS) தகவலின்படி, இந்த ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களிலேயே பிரான்சில் சுமார் 7,800 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது. இதனால், குறிப்பாக தென் பிரான்ஸ் மட்டுமன்றி நாடு முழுவதும் காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்