Ile de France உட்பட சனிக்கிழமை நண்பகல் முதல் 24 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
10 ஆடி 2026 வெள்ளி 15:05 | பார்வைகள் : 3045
நாட்டின் பெரும்பாலான பகுதிகளை புதிய வெப்ப அலை தாக்கியுள்ளது. இந்த வெப்பநிலை குறைந்தபட்சம் அடுத்த வாரத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 10, வெள்ளிக்கிழமை, Météo-France அறிவித்ததன்படி, சனிக்கிழமை நண்பகல் முதல் பிரான்சின் வடமேற்கு பகுதியில் உள்ள 24 Départements கடும் வெப்ப அலை (Canicule) காரணமாக சிவப்பு எச்சரிக்கை (Vigilance Rouge) நிலையில் வைக்கப்படும். மேலும், நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்டுள்ள மூன்றாவது வெப்ப அலை காரணமாக 56 Départements செம்மஞ்சள் எச்சரிக்கை (Vigilance Orange) நிலையில் இருக்கும்.
சனிக்கிழமை பிற்பகலில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான பகுதிகளில் 35°C முதல் 38°C வரை இருக்கும். Val-de-Loire பகுதியில் சில இடங்களில் 39°C வரை உயரக்கூடும். மத்தியதரைக் கடல் கரையோரப் பகுதிகள், Manche கரையோரப் பகுதிகள் மற்றும் Hauts-de-France பகுதி மட்டும் 35°C-க்கு கீழ் இருக்கும். இந்த வெப்ப அலை குறைந்தபட்சம் அடுத்த வாரத்தின் நடுப்பகுதி வரை தொடரும் என Météo-France தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பேச்சாளர் Maud Bregeon, சிவப்பு எச்சரிக்கையில் உள்ள Départements-களில் இதற்கு முன்பு இல்லாத "ORSEC – கடுமையான வெப்பநிலை அவசரத் திட்டம்" (Plan Orsec "Chaleurs extrêmes") அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சிவப்பு எச்சரிக்கையில் உள்ள 9 Départements:
- Morbihan
- Ille-et-Vilaine
- Mayenne
- Sarthe
- Loire-Atlantique
- Maine-et-Loire
- Vendée
- Deux-Sèvres
- Vienne
சனிக்கிழமை முதல் சிவப்பு எச்சரிக்கையில் சேர்க்கப்படும் Départements:
Cher, Eure-et-Loir, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loire-Atlantique, Loiret, Maine-et-Loire, Mayenne, Morbihan, Orne, Sarthe, Paris, Seine-et-Marne, Yvelines, Deux-Sèvres, Vendée, Vienne, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire