Paristamil Navigation Paristamil advert login

காவிரி விவகாரத்தில் திமுக துரோகத்தை பட்டியலிட்டால் புத்தகமே போடலாம்: அமைச்சர் நிர்மல்குமார்

காவிரி விவகாரத்தில் திமுக துரோகத்தை பட்டியலிட்டால் புத்தகமே போடலாம்: அமைச்சர் நிர்மல்குமார்

11 ஆடி 2026 சனி 06:16 | பார்வைகள் : 130


காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு திமுக செய்த துரோகத்தை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடலாம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டி;

970ம் ஆண்டு முதல் இப்போது வரை திமுக பல துரோகங்கள் செய்துள்ளது. இன்றைக்கு காவிரி விவகாரம் இவ்வளவு தூரம் போய் நிற்க திமுகவே காரணம். ஹேமாவதி அணையை கட்டினால் ஆட்சேபணை இல்லை என்று இவர்கள் (திமுக) சட்டசபையில் கூறினர்.

அதன் பின்னர் ஹேமாவதி, கபினி, ஹாரங்கி போன்ற 4 அணைகளை கர்நாடகா கட்டியது. 1971ல் காவிரி மீதான நமது சட்ட உரிமையை கருணாநிதி வாபஸ் வாங்கினார். 1974ல் ஐம்பது ஆண்டு கால ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டனர்.

2007வ் காவிரி ஆணையம் தீர்ப்பு வந்தது. கெஜட்டில் வெளியிட முடியவில்லை. 2013ல் ஜெயலலிதா தான் போராடி பெற்றார். இப்படி காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு திமுக செய்த துரோகத்தை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடலாம்.

காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களுக்கு ஒரே சாட்சி முன்னாள் அமைச்சர் துரைமுருகன். கர்நாடகாவுக்கு திமுக எப்போதுமே இணக்கமாக செயல்படும். காரணம், திமுகவின் அனைத்து சொத்துகளும் பெங்களூருவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதுதான்.

காவிரி விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே வழி சட்ட போராட்டம் தான். அதில் எந்த சமாதானத்திற்கும் இடம் கிடையாது. மேகதாது அணை கட்ட அனுமதி கிடைக்க போவதில்லை.

இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.