Paristamil Navigation Paristamil advert login

அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,000 கோடி சொத்து முடக்கம்

அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,000 கோடி சொத்து முடக்கம்

12 ஆடி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 139


அனில் அம்பானி குழுமத்துக்கு எதிரான பண மோசடி வழக்கில், புதிதாக 1,021 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

அனில் அம்பானி குழும நிறுவனங்கள், வங்கி கடன்களை வெவ்வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விட்டதாக எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் புகாரளிக்கப்பட்டது.

முறைகேடு அந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சி.பி.ஐ.,யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தது.

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்' மற்றும் 'ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ்' நிறுவனங்கள் மக்களிடம் திரட்டிய 15,548 கோடி ரூபாய் நிதி முறைகேடாக திருப்பிவிடப்பட்டதாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ்' குழுமத்துக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 'ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர்' நிறுவனம் வைத்துள்ள, 'ரிலையன்ஸ் பவர்' நிறுவனத்தின் பங்குகள் உட்பட 1,021 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

கைது தற்போதைய நடவடிக்கையுடன், இந்த வழக்கில் இதுவரை, 20,367 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.


மேலும், அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 77.86 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக் களும் முடக்கப் பட்டுள்ளன.