தேவைப்பட்டால் இரத்தம் சிந்தியும் சுதந்திரத்தை காப்போம் – மக்ரோன்!!
13 ஆடி 2026 திங்கள் 15:59 | பார்வைகள் : 2800
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜூலை 14 தேசிய தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்கு வழங்கிய உரையில், 2022 முதல் ஐரோப்பாவில் போர் சூழல் நிலவிவருவதால், சுதந்திரத்தையும் சர்வதேச சட்டத்தையும் பாதுகாக்க பிரான்ஸும் ஐரோப்பிய நாடுகளும் தேவைப்பட்டால் இரத்தம் சிந்தியும் போராடத் தயாராக உள்ளன என்று தெரிவித்தார்.
அமைதியே தங்களின் முக்கிய இலக்கு என்றாலும், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் எந்தவித தயக்கமும் இருக்காது என்று அவர் வலியுறுத்தினார். மேலும், பிரான்ஸுக்காக உயிர்நீத்த மற்றும் காயமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை அவர் நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
2017 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து பிரான்ஸின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு செலவினங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும், அப்போது அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் மக்ரோன் கூறினார்.
மேலும், 2026 முதல் 2030 வரை பாதுகாப்புத் துறைக்காக கூடுதலாக 36 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த நிதி ஆயுதக் கையிருப்பை அதிகரித்தல், ராணுவத்தின் தயார்நிலையை மேம்படுத்தல், தேசிய இறையாண்மையை உறுதிப்படுத்தல் மற்றும் அணு தடுப்புத் திறனை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire