Paristamil Navigation Paristamil advert login

FIFA உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் தோல்வி குறித்து எம்பாப்பே

FIFA உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் தோல்வி குறித்து எம்பாப்பே

15 ஆடி 2026 புதன் 16:20 | பார்வைகள் : 589


தங்கள் திட்டத்தை செயல்படுத்தவே முடியவில்லை என பிரான்ஸ் வீரர் எம்பாபே தெரிவித்தார்.

ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் படுதோல்வியடைந்தது.

நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பேவினால் (Kylian Mbappe) ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

போட்டிக்கு பின் பேசிய எம்பாப்பே, "நாங்கள் நிறைய பிழைகளை செய்துவிட்டோம். திட்டமிட்ட ஆட்ட யுக்திகளை செயல்படுத்தவே முடியாமல் போய்விட்டது. உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு உரிய தரத்தில் ஆடாததால் இறுதிப் போட்டி என்று கனவை எட்ட முடியவில்லை" என்றார்.