Livret A சேமிப்புக் கணக்கின் வட்டி 1.7 சதவீதமாக அதிகரிப்பு!!
15 ஆடி 2026 புதன் 16:14 | பார்வைகள் : 2014
Livret A சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் 1.5% இலிருந்து 1.7% ஆக உயர்த்தப்படும் என்று பொருளாதார அமைச்சர் Roland Lescure இன்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில், Livret d'Épargne Populaire (LEP) எனப்படும் மக்கள் சேமிப்புக் கணக்கின் வட்டி 2.5% ஆகவே தொடரும்.
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் (Inflation) மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்குப் போரின் தாக்கத்தால் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்ததே இதற்கான முக்கிய காரணமாகும். ஜூன் மாதத்தில் பணவீக்கம் 1.8% ஆக இருந்ததாக INSEE தெரிவித்துள்ளது.
Livret A வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை இரண்டு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது:
- கடந்த ஆறு மாதங்களின் சராசரி பணவீக்கம்.
- யூரோ மண்டல பணச் சந்தையின் குறியீட்டு வட்டி விகிதமான €STR (Ester).
இந்த முறையின் நோக்கம், பணவீக்கத்தால் சேமிப்பாளர்களின் பண மதிப்பு குறையாமல் பாதுகாப்பதாகும்.
சேமிப்பாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருமானம்
Cercle de l'Épargne அமைப்பின் பொருளாதார நிபுணர் பிலிப் கிரெவெலின் கணக்குப்படி:
- €7,800 (சராசரி வைப்ப) வைத்திருக்கும் ஒருவர், ஆண்டுக்கு €117 வட்டிக்கு பதிலாக €132.60 பெறுவார். அதாவது €15.60 கூடுதல் வருமானம் கிடைக்கும்.
- அதிகபட்ச வரம்பான €22,950 வைத்திருப்பவர்கள், €344.50க்கு பதிலாக €390.15 பெறுவார்கள். அதாவது €45.65 கூடுதல் வட்டி கிடைக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire