இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரை மாய்ப்பு!
17 ஆடி 2026 வெள்ளி 10:33 | பார்வைகள் : 787
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்
துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரமரத்ன தனது மெய்க்காப்பாளரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று காலை 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சி.டி. விக்ரமரத்னவின் உடல் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire