வடக்கு பெருவில் ஆழமான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 14 பேர் பலி
17 ஆடி 2026 வெள்ளி 17:05 | பார்வைகள் : 573
வடக்கு பெருவில் சிறிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வியாழக்கிழமை வடக்கு பெருவில் உள்ள சான் ஜுவான்(San Juan) மாவட்டத்தில் இருந்து சியுடாட் டி டியோஸ்(Ciudad de Dios) நோக்கிச் சென்ற சிறிய பேருந்து(Mini Bus) கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கழிந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோரமான விபத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 14 பேர் வரை உயிரிழந்து இருப்பதுடன் 5 பேர் வரை காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்து விபத்தானது பெரு தலைநகர் லிமாவில் இருந்து வடக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஜமார்கா பகுதியில் நிகழ்ந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கினர்.
அத்துடன் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை எந்தவொரு துல்லியமான காரணமும் வெளியிடப்படவில்லை.
விபத்துக்குள்ளான பேருந்தானது குறுகலான பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் மீட்புப் பணிகள் மிகவும் சவாலானதாக இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி எட்சன் ரோமன் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த போது பேருந்தில் மொத்தம் 19 பேர் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire