சுகாதார சேவைகளைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை: பிரதமர் மோடி
18 ஆடி 2026 சனி 09:36 | பார்வைகள் : 450
சுகாதார சேவைகளைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சண்டிகரில் 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதாரம், கல்வி மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: \u003c/b\u003eஐபிசி( Indian Penal Code)சட்டங்களை பாரதியா நியாய சன்ஹீதாவாக மாற்றி உள்ளோம்.
சுகாதாரம் குறித்து நாம் பேசும் போது, அதில் தூய்மை ஆற்றும் முக்கிய பங்கை பற்றி நாம் அறிவோம். நாட்டிற்காக தூய்மை பாரதம் இயக்கத்தை அரசு துவங்கியது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டன. பொது இடங்களில் தூய்மையை உறுதி செய்வதற்காக பிரசார இயக்கம் துவங்கப்பட்டது. தூய்மையை நமது வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக மாற்றுவதற்காக நாம் பல்வேறு முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டது.
சுகாதார கட்டமைப்புகள் இந்தியாவில் விரைவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2014 முதல் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான புதிய மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் டாக்டர் ஆவது மிகவும் கடினமாக இருந்தது. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால், இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் அந்த நிலையை மாற்றிவிட்டோம். நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் முதுகலை மருத்துவ இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகிவிட்டது.
புற்றுநோய் போன்ற தீவிரநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து நிலைகளிலும் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.
காசநோயில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என உறுதி பூண்டுள்ளோம். காச நோய் இல்லாத இந்தியா பிரசாரம் துவங்கி உள்ளது. உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு சிகிச்சை கிடைக்கிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, காசநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 21 சதவீதம் குறைந்துள்ளது.
தற்போது மருத்துவ சிகிச்சைக்காக உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றின்போது, இந்தியா உலக நாடுகளிடம் உதவி கேட்கவில்லை. மாறாக உலக நாடுகளுக்கு உதவி செய்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதன் பிறகு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பஞ்சாப் அரசின் நோக்கம் தூய்மையானதோ அல்லது நேர்மையானதோ இல்லை. நேர்மையற்ற கட்சியாக ஆம் ஆத்மி விளங்குகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. அடிக்கடி ரவுடிகள் மோதிக் கொள்வதுடன், போலீஸ் ஸ்டேசன் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. போதை மருந்து கடத்தல்காரர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர். மாநில அரசின் பட்ஜெட் பெரும்பகுதி கடனுக்காக செ லவு செய்யப்படுகிறது. அரசுப் பணத்தை அமைச்சர்கள் அனுபவித்து வருகின்றனர். பஞ்சாபில் பகிரங்கமாக கொள்கை நடக்கிறது.
மத்திய அரசு அனுப்பிய கோடிக்கணக்கான ரூபாயைக் கொண்டு சாலைகள், கால்வாய்களை அமைத்து இருக்கலாம். காங்கிரசில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலை யாராலும் நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire