பழநி மடம் நிலம் மோசடி வழக்கு: தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள்!
19 ஆடி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 350
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான தக்காராக பழநி முருகன் கோயில் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.
ரூ.100 கோடி மதிப்புள்ள அந்த நிலம் கடந்த ஆண்டு பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இதற்கிடையில் ஜூலை 6-ல் பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலம் இருவருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழநி கோயில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக துறைரீதியாக பழநி நிலை-1 சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் அதிகாலை 4:00 மணி முதல் சி.பி.சி.ஐ.டி.அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி.அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். கிரையம் பெற்றவரில் ஒருவரான, மடத்துக்குளம் பாப்பான்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire