Paristamil Navigation Paristamil advert login

காவல் நிலையம் முன் கத்தியுடன்..

காவல் நிலையம் முன் கத்தியுடன்..

19 ஆடி 2026 ஞாயிறு 20:28 | பார்வைகள் : 908


Val‑de‑Marne பகுதியில் உள்ள Cachan காவல் நிலையம் முன் ஒருவர் கத்தியுடன் சென்றுள்ளார்.

அந்த நபர், மிகவும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார்

தெருவில் இருந்த மற்றொரு நபரை குறிவைத்து தாக்குதல் நடாத்த எத்தனித்தாகக் காவறதுறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நடவடிக்கையில இறங்கிய காவற்துறையினர், மின்அதிர்ச்சி துப்பாக்கியைப்  பயன்படுத்தி அவரைக் கைது செய்துள்ளனர்.

காவல் நிலையத்தின் கதவுகள் தொழில்நுட்ப கோளாறுடன் இருந்தமையால்,,காவற்துறையினரின் நடவடிக்கை தாமதமானாலும் தாக்குதலிற்கு முன்னர் அவரை நிலைகுலையச்  செய்து தடுத்துள்ளனர்.

கத்தல், ஆவேசம், அச்சுறுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து, காவற்துறையினர் பல முறை எசசரித்தும் கத்தியைக் கீழே போடமையால் மின் அதிர்ச்சித் துப்பாக்கியை உபயோகிக்க வேண்டி வந்ததாகக் காவற்துறையினரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியால் அவர் தரையில் விழுந்தார். உடனடியாக விலங்குகள் இடப்பட்டு  கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தின் சரியான சூழலை கண்டறிய ,விசாரணை தொடர்கிறது