Paristamil Navigation Paristamil advert login

ஈரான் போரில் 2 வாரத்தில் 100 வீரர்கள் காயம் - ஒப்புக்கொண்ட அமெரிக்கா

ஈரான் போரில் 2 வாரத்தில் 100 வீரர்கள் காயம் - ஒப்புக்கொண்ட அமெரிக்கா

22 ஆடி 2026 புதன் 12:26 | பார்வைகள் : 539


ஈரான் போரில் 2 வாரத்தில் 100 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நிலவி வருகிறது.

ஈரானின் பாந்தர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், கொனர்க், சிரிக் போன்ற துறைமுக நகரங்கள் மீது தொடர்ந்து 10வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா மறைப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஷான் பார்னெல், " ஜூலை 7 முதல் நடைபெற்று வரும் தாக்குதலில் சுமார் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஏதாவது ஒருவகையில் காயமடைந்துள்ளனர்.

அதில் பெரும்பாலானோருக்கு சிறிய அளவிலான காயம் என்பதால் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்" என தெரிவித்துள்ளார்.