புதிய அரசுக்கு கால அவகாசம் தர வேண்டும்: துணை ஜனாதிபதி சி.பி.ஆர்
23 ஆடி 2026 வியாழன் 09:18 | பார்வைகள் : 275
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு சிறிது கால அவகாசம் தர வேண்டும்'' என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
கோயம்புத்துாருக்கு வருவது என்றாலும், தமிழகத்துக்கு வருவது என்றாலும், அது ஒரு தனி மகிழ்ச்சி, தனி துடிப்பு என்பதை மறுக்க இயலாது.
டில்லியில் போராடும் மாணவர்களின் பிரச்னை குறித்து அரசியல் தலைவர்கள் சொல்வர். மாணவர்கள், எப்போதும் தேச ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் மேம்படுத்த வேண்டும். ஒற்றுமையால் தான் இந்தியா உயர்ந்து வருகிறது. ஒற்றுமையாலும், தேசப்பற்றால் மட்டும் தான் உலக அளவில் புகழ் பெற முடியும்.
தமிழக அரசு புதியவர்கள் என, நீங்களே சொல்லி விட்டீர்கள். அவர்களுக்கு சிறிது கால அவகாசம் தர வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம், உங்களுடைய விருப்பம், என்னுடைய விருப்பம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire