Paristamil Navigation Paristamil advert login

முதல்வரின் காலை உணவுத்திட்டம் பெயர் மாற்றம்: காமராஜர் பெயரைச் சூட்டியது தவெக அரசு

முதல்வரின் காலை உணவுத்திட்டம் பெயர் மாற்றம்: காமராஜர் பெயரைச் சூட்டியது தவெக அரசு

23 ஆடி 2026 வியாழன் 13:29 | பார்வைகள் : 270


முதல்வரின் காலை உணவுத்திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என்று  தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக கடந்த திமுக ஆட்சியில் காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் காலை வேளையில் பள்ளி நாட்களின் போது சத்தான உணவு இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் இந்த திட்டம் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. காய்கறிகள் நிறைந்த சாம்பார், உப்புமா, கிச்சடி, பொங்கல் என வாரத்தின் 5 நாட்களிலும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு காலை உணவு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் தற்போதைய தவெக தலைமையிலான தமிழக அரசு, முதல்வரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தற்போது இந்த உணவுத்திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.