Paristamil Navigation Paristamil advert login

700,000-க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெற்ற துப்பாக்கிச் சட்டத்திற்கு எதிரான மனுவை நிராகரித்த தேசியசபை!!

700,000-க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெற்ற  துப்பாக்கிச் சட்டத்திற்கு எதிரான மனுவை நிராகரித்த தேசியசபை!!

22 ஆடி 2026 புதன் 21:24 | பார்வைகள் : 274


தேசிய சபையின் இணையதளத்தில் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமெரி அதிகாரிகள் துப்பாக்கி பயன்படுத்தியபோது அவர்கள் சட்டபூர்வமாகச் செயல்பட்டதாக முன்கூட்டியே கருதும் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சுமார் 7,30,000 கையொப்பங்கள் கிடைத்தன. 500 000 மேற்பட்ட கையொப்பங்கள் கிடைத்ததால் தேசிய சபையில் விவாதிக்க வாய்ப்பு இருந்தது.

ஆனால் தேசிய சபையின் சட்ட ஆணையம் 35 எதிர்ப்பு வாக்குகளும் 21 ஆதரவு வாக்குகளும் பெற்று, இந்த மனுவை மேலதிக நடவடிக்கையின்றி முடிக்க தீர்மானித்தது. மனுவின் நோக்கம் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு, சட்ட முன்மொழிவு ஜூலை 7 அன்று தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டதால் மீண்டும் விவாதம் தேவையில்லை என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த மனுவுக்கான அறிக்கையாளர் உகோ பெர்னாலிசி, இது அடிப்படை உரிமைகள் தொடர்பான முக்கியமான குடிமக்கள் கோரிக்கை என்பதால் தேசிய சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் சட்டத்தை முன்வைத்த எரிக் போஜே, பாராளுமன்றத்தின் முடிவை மதிக்க வேண்டும் என்று கூறி புதிய விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆரம்பத்தில் காவல்துறையினருக்கு 'சட்டபூர்வ தற்காப்பு' என்ற முன்கூட்டிய பாதுகாப்பை வழங்கியிருந்த சட்ட முன்மொழிவு, பின்னர் அரசு திருத்திய வடிவில் அவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள் செயல்பட்டதாகக் கருதப்படும் என்று மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கும் மனித உரிமை அமைப்புகள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 19 அன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.