Paristamil Navigation Paristamil advert login

1.3 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகளுடன் கைப்பை மாயம்: காவல்துறையினர் தீவிர விசாரணை!!

1.3 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகளுடன் கைப்பை மாயம்: காவல்துறையினர் தீவிர விசாரணை!!

23 ஆடி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 207


அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபர், பரிசில் உள்ள ஆடம்பர தங்கும் விடுதிக்கு வந்தபோது, தான் கொண்டு வந்த கைப்பை மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதை உணர்ந்தார். அந்தப் பையில் மொத்தம் 1.3 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள உயர்தர நகைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன பொருட்களில் சுமார் 8 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள வைர மோதிரம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த நகைகள் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணத்தின் எந்தக் கட்டத்தில் கைப்பை மாயமானது என்பது இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இந்த மர்மமான நகை மாயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம், பயண வழித்தடங்கள் மற்றும் தங்கும் விடுதியின் பாதுகாப்பு காட்சிப்பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கைப்பையை கண்டுபிடிக்கவும், சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணரவும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.