Paristamil Navigation Paristamil advert login

ஜெர்மனில் ரயில் நிலையங்களில் மது அருந்த தடை

ஜெர்மனில் ரயில் நிலையங்களில் மது அருந்த தடை

23 ஆடி 2026 வியாழன் 17:25 | பார்வைகள் : 315


ஜெர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தேசிய ரயில்வே தடை விதித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் தூய்மையை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், பாதுகாப்பு அலுவலர் ஒருவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, போதையிலிருந்த பயணி ஒருவர் அவரை தாக்கியதில், ரயிலுக்கு வெளியே போய் விழுந்த அந்த அலுவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதை சுட்டிக்காட்டிய ஜேர்மன் தேசிய ரயில்வே அமைப்பான Deutsche Bahn அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியான Evelyn Palla, அதிக மதுபானம் புரண்டோடும் இடங்களில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பதை அடிக்கடி காணமுடிகிறது என்றார்.

ஆக, அக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்குள், படிப்படியாக ஜேர்மனியின் அனைத்து ரயில் நிலையங்களுக்கும், இந்த மது அருந்தும் தடை அமுல் படுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து தடையை மீறுவோர், ரயில் நிலையங்களுக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்படும்.