Paristamil Navigation Paristamil advert login

உக்ரேனிய வான்வழித் தாக்குதல் - விமானப் போக்குவரத்து நிறுத்தம்

உக்ரேனிய வான்வழித் தாக்குதல் - விமானப் போக்குவரத்து நிறுத்தம்

22 ஆனி 2026 திங்கள் 19:15 | பார்வைகள் : 1893


ரஷ்யாவில் தாக்குதல் காரணமாக மாஸ்கோ விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

டசின் கணக்கான உக்ரேனிய ட்ரோன் விமானங்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்துள்ளது.

எனினும், மொத்தம் 80 உக்ரேனிய ட்ரோன் விமானங்களை பாதுகாப்புப் படைகள் இடைமறித்துள்ளன.

இந்த தகவலை தெரிவித்த மேயர் செர்ஜி சோபியானின், பல்வேறு ட்ரோன் விமானங்கள் விழுந்த இடங்களுக்கு அவசர சேவைகள் விரைந்துள்ளதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மாஸ்கோ விமான நிலையங்கள் திங்கட்கிழமை காலை விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தின.

பல மணிநேரம் நீடித்த இந்தத் தாக்குதலின்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஷெரெமெட்யேவோ, வ்னுகோவோ, டொமோடெடோவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி விமான நிலையங்களில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் காலையில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.  

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3