Paristamil Navigation Paristamil advert login

உலகளாவிய சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வுகள்; மோகன் பாகவத்

உலகளாவிய சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வுகள்; மோகன் பாகவத்

29 ஆனி 2026 திங்கள் 09:28 | பார்வைகள் : 1104


உலகளாவிய சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வுகள் உள்ளன, அதை உலகம் செவி கொடுத்து கேட்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டின் நிறைவு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் தொலைநோக்குப் பார்வை இந்தியாவிடம் உள்ளது. மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க உதவும்.


உலகிற்கு முழுமையை அளிப்பதே இந்தியாவின் பங்கு. உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிரினங்களின் நலனுக்காகவும் இந்தியாவின் குரலை செவி கொடுத்து கேட்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது. உலகின் சவால்களை முழுமையாக எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3