Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டு நன்கொடையை அமெரிக்காவும் கட்டுப்படுத்தி உள்ளது: இந்தியா பதில்

வெளிநாட்டு நன்கொடையை அமெரிக்காவும் கட்டுப்படுத்தி உள்ளது: இந்தியா பதில்

8 ஆவணி 2026 சனி 06:32 | பார்வைகள் : 363


எப்ஆர்சிஏ சட்டம் குறித்து அமெரிக்க எம்பி விமர்சித்து இருந்த நிலையில், '' அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடையை ஒழுங்குபடுத்தி உள்ளன'' என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

எப்சிஆர்ஏ எனும் வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத் திருத்த மசோதாவை   நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து நன்கொடை தருபவர் யார், அவரது நோக்கம் என்ன, அந்த நன்கொடை இந்தியாவில் என்ன காரணத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்வதே எப்சிஆர்ஏ திருத்த சட்டத்தின் நோக்கம்.  பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டு இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுவதை காங்கிரஸ் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக அமெரிக்க எம்பியான குடியரசு கட்சியைச் சேர்ந்த  ரிலே மூரே என்பவர் கூறுகையில், இந்த சட்டத் திருத்தத்தால், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில்  பாதிப்பு ஏற்படும். தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் , கல்வி அமைப்புகள் மற்றும் மதரீதியான அமைப்புகள் உள்ளிட்டவற்றை கையாளும் இந்த  சட்டத்திருத்தத்தின் வாயிலாக,  தேவாலாயஙகள் மற்றும்  மத ரீதியான அறக்கட்டளைகளை அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் எனத் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:

எப்ஆர்சிஏ குறித்த கருத்துகளை பார்த்தோம். இந்தியா தொடர்பான சட்டமியற்றும் விஷயங்கள் நமது உள் விவகாரங்கள் ஆகும், அவை குறித்து நாட்டின் பார்லிமென்ட்டே முடிவுகளை எடுக்கிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகள் வெளிநாட்டு நன்கொடையை குவிவதை ஒழுங்குபடுத்துகின்றன என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.