லாட்டரி நிறுவனத்திடம் ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன்? அமைச்சர் ஆதவ் vs உதயநிதி விவாதம்
8 ஆவணி 2026 சனி 08:43 | பார்வைகள் : 567
லாட்டரி நிறுவனத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன் என அமைச்சர் ஆதவ் சட்டசபையில் கேள்வி எழுப்பியது காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது.
சட்டசபையில் அமைச்சர் ஆதவ் பேசுகையில் திமுகவினர் ஏன் சாராய பேக்ட்ரி நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
அப்போது ஆதவ் பேசியதாவது:
எல்லோருக்கும் தெரிந்தது தான்; மது விலக்கு கொள்கை என்பது எங்களுடைய கொள்கை; போதையில்லா தமிழகம் எங்களுடைய கொள்கை, ஆட்சிக்கு வந்த பின்பும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், இங்கு இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எந்த தொழிலிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது.
முக்கியமாக மதுவில் ஈடுபட்டது கிடையாது. திமுகவின் பார்லிமென்ட் எம்பி ஜெகத்ரட்சகன் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா, சாராய ஆலை நடத்தி கொண்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் ஆர்டர் வந்து யார் வாங்கியது; திமுகவே அரசு, திமுகவில் இருக்கும் பார்லிமென்ட் எம்பிக்கள் சாராய ஆலைகள் நடத்துகிறார்கள்.
திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறார். திமுகவின் ஐடி அமைச்சர் சாராய ஆலை நடத்துகிறார். இதுக்கு மேல் என்ன ஆதாயம் வேண்டும், என்றார். உடனே நீங்கள் ஏன் லாட்டரி தொழில் நடத்துகிறீர்கள் என திமுகவினர் கூச்சலிட்டனர்.
இதன் பிறகு அமைச்சர் ஆதவ் பேசியதாவது:
லாட்டரி என கூறுகிறார்கள்; லாட்டரி நிறுவனத்திடம் ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன், தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள், அப்பொழுது சொல்லுங்கள். நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லை. இவ்வாறு அமைச்சர் ஆதவ் பேசினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அளித்த பதில்:
அமைச்சர் திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு உதயநிதி கூறினார்.
இதற்கு உடனே அமைச்சர் ஆதவ் பதில் அளித்து பேசியதாவது:
அது அவர் மற்றும் அவர் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். அது அவர் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு அது எதுவும் தெரியாது. அப்பாவை இங்கே காணும்; வீட்டிற்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள். உங்கள் அப்பா கரெக்டா சொல்லுவார். ஏன் வாங்கினார் என்று உங்கள் அப்பா சொல்லுவார். இவ்வாறு அமைச்சர் ஆதவ் பே சினார்.
இதற்கிடையே, ''இந்த நன்கொடை என்பதை பாஜ, காங்கிரஸ் என இந்தியாவில் உள்ள அத்தனை கட்சிகளும் வாங்கி இருக்கிறார்கள். இதை எதையோ லஞ்சம் போல பேசாதீர்கள்'' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire