தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார்; சட்டசபையில் முதல்வர் விஜய் உருக்கம்
8 ஆவணி 2026 சனி 10:51 | பார்வைகள் : 508
தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயார் என சட்டசபையில் முதல்வர் விஜய் உருக்கமாக பேசினார்.
தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பொது பட்ஜெட், வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 07) காலை தமிழக சட்டசபை கூடியது. மறைந்த இயக்குனர் கே.பாக்கியராஜ், பாடகி ஜானகி எழுத்தாளர் புவியரசு, பூமணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது. தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? டில்லியில் கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள். மேகதாது விவகாரத்தில் இதுவரை தமிழ்நாடு அரசு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளை விளக்க வேண்டும்.
பயிர் கடன் தள்ளுபடி செய்ய எவ்வளவு காலம் ஆகும் என அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' இவ்வாறு உதயநிதி பேசினார். உடனே இதற்கு முதல்வர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
அவசியமில்லை
முதல்வர் விஜய் பேசியதாவது: காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டு இருக்கிறார்கள். காவிரி நமக்கு உயிர் ஆதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை.
அதற்கான அவசியமும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து தான் தீர்மானம் போட்டோம். அதனை கடிதமாக பிரதமருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதோடு நாம் அப்படியே இருந்துவிடவில்லை.
மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நதி நீர் பங்கீட்டிலும் சரி , மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதிலும் சரி, தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கூட நம்ம அரசு விட்டு தரவே தராது. அது தான் நமது நிலைப்பாடு. கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்படும் முயற்சிகள் குறித்து 1969ல் இதே அவையில் விவாதம் நடந்து இருக்கிறது.
அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்பொழுது அணை கட்ட விட்டது யார் என்று கேட்டு மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. அது நமது நோக்கமும் இல்லை. யாருக்கு பெருமை என்று எல்லாம் பார்க்க கூடாது. இது தமிழக மக்களின் பிரச்னை.
காவிரி பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், மத்திய அரசும் உட்கார்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1969ல் இந்த அவையில் பேசி இருக்கிறார்கள். அன் பிறகு நிலைமை மாறியது நமக்கு எல்லோருக்கும் தெரியும். சட்டப்படி இந்த பிரச்னையை அணுகுவதில் உறுதியாக இருக்கிறோம்.
அதில் எந்த மாற்றமும் கிடையாது. காவிரி பிரச்னையில் ஒரு முயற்சி எடுத்துப்பார்க்கலாமே என்று நினைத்துதான் பெங்களூரு பயணத்தை பற்றி யோசித்து கேட்டது நான்தான்; இது பற்றி பல கருத்துக்கள் வந்தன.
பிரச்னையை தீர்க்க பாசிட்டிவான சிக்னல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் யோசித்தேன். இன்றைய காலகட்டத்தில் பகை நாடுகளே பேசித் தீர்க்கப் பார்க்கிறாங்க, பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தால் என்னன்னு நினைத்தேன்.
பேப்பர் படித்தால்…
இந்த பயணத்தால் அவமானம் நேர்ந்தால் என்னவாவது என்று கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்ள நான் தயார். காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். குறுவை சாகுபடிக்கு ஏற்கனவே அந்த நிவாரணம் கொடுத்தாச்சு.
இதுவந்து அரசியலே நாங்கள் தான் என்று சொல்லி கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை. முன்ன, பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரிந்து இருக்கும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு பதில் அளித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:
மூன்று ஆண்டுகளாக முதல்வர் விஜய் யாரையும் பார்த்து பயப்பட்டதில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட என்ன பயம் என கேட்கின்றனர். நாளை தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார். திமுக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், ''நான் மேகதாது பற்றி பேசுகிறேன். அனைத்துக்கட்சி கூட்டம், காவிரியில் ஏன் தண்ணீர் வரவில்லை என்று பேசுகிறேன். ஆனால் அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் திசை திருப்ப பார்க்கிறார்'' என்றார். ''ஏங்க.. ஏங்க.. திரும்ப திரும்ப அதே பேசுறீங்க,'' என கூறி மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை பேச முயன்ற உதயநிதியை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தடுத்து நிறுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire