நாடு முழுவதும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு – ஒரே மாதத்தில் 18,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை!!
7 ஆவணி 2026 வெள்ளி 21:21 | பார்வைகள் : 2373
கடந்த ஆண்டை விட வீடுகளில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடு முழுவதும் 18,665 வீடுகளில் கொள்ளை இடம்பெற்றுள்ளது. இது 2025 ஜூலையுடன் ஒப்பிடுகையில் 7.1 சதவீத அதிகரிப்பு ஆகும். கடந்த ஆண்டு ஜூலையில் 17,419 வீடுகளில் கொள்ளை பதிவாகியிருந்தது.
இதனுடன், 2026 ஜூலை மாதத்தில் 8,983 வர்த்தக நிலையங்களிலும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை சேர்த்து மொத்தம் 27,648 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 5.8 சதவீத அதிகரிப்பாகும். எனினும், அனைத்து குற்றச் சம்பவங்களும் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினரிடம் முறைப்பாடாகப் பதிவாகாது என்பதால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வீடுகளில் இடம்பெறும் கொள்ளைகள் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருவதாகக் கருத முடியாது என அமைச்சகத்தின் புள்ளிவிவரப் பிரிவு தெரிவித்துள்ளது. 2024 ஜூலையில் 18,987 கொள்ளைகள் பதிவாகியிருந்த நிலையில், 2026 ஜூலையில் பதிவான எண்ணிக்கை அதைவிட குறைவாகவே உள்ளது. மேலும், 2025 ஆகஸ்ட் முதல் 2026 ஜூலை வரையான 12 மாதங்களில் நாடு முழுவதும் 215,554 வீட்டு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய 12 மாத காலத்துடன் ஒப்பிடும்போது 1 சதவீத அதிகரிப்பு ஆகும்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire