Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானை நோக்கி நகரும் ‘டால்பின்’ சூறாவளி - விமான சேவைகள் ரத்து

ஜப்பானை நோக்கி நகரும் ‘டால்பின்’ சூறாவளி - விமான சேவைகள் ரத்து

8 ஆவணி 2026 சனி 06:07 | பார்வைகள் : 480


ஜப்பானின் தென்பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி ‘டால்பின்’ சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டதுடன், அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூறாவளி மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று காரணமாக 70 வயதுடைய மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, ஒகினாவாவில் 240 பேர் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ‘டால்பின்’ சூறாவளி நாளை மறுதினம் காலை சீனாவின் கிழக்குக் கடற்கரையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.