Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் நிர்வாண வீடியோ வலையில் சிக்கவைத்து பணம் பறிக்கும் கும்பல்

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் நிர்வாண வீடியோ வலையில் சிக்கவைத்து பணம் பறிக்கும் கும்பல்

8 ஆவணி 2026 சனி 13:53 | பார்வைகள் : 735


Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மோசடி இந்தியாவிலிருந்தே இயங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடிக்காரர்கள் தங்களின் இலக்குகளை வீழ்த்துவதற்கு முன்னர், அவர்களின் சகோதர சகோதரிகள் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

இந்த மோசடியின் முதல் கட்டமாக, Instagram மூலம் அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட கணக்கிலிருந்து 'Hi' எனச் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

அந்தச் செய்திக்கு பதிலளிப்பவர்களைக் அவதானித்து, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்குகின்றனர்.

புகைப்படத்தில் உள்ள பெண்ணின் அழகைக் கண்டு அவர்கள் மீண்டும் அந்தச் செய்திக்குப் பதிலளிக்கின்றனர்.

அதன்பின்னர், அப்பெண்ணின் அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, மறுமுனையிலும் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு அல்லது WhatsApp வீடியோ அழைப்பு மூலம் காட்சிகளை வழங்குமாறு தூண்டுகின்றனர்.

பின்னர் அந்த வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து, அவற்றை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி பணம் மற்றும் கப்பம் பெறப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, அடையாளம் தெரியாத கணக்குகள் அல்லது எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.