Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் குற்றவியல் வழக்காக மாறியுள்ள நோய்த்தொற்று பரவல்

சுவிட்சர்லாந்தில் குற்றவியல் வழக்காக மாறியுள்ள நோய்த்தொற்று பரவல்

8 ஆவணி 2026 சனி 14:50 | பார்வைகள் : 463


சுவிட்சர்லாந்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒருவர் பலியான வழக்கு குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டதால், அந்த வழக்கு, குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில், லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ் என்னும் நோய் பரவிவருகிறது.

28 பேர் லீஜியோனெல்லா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகிவிட்டதால், அந்த வழக்கு தற்போது குற்றவியல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

அதாவது, இந்த இந்த லீஜியோனெல்லா கிருமி, கட்டிடங்களை குளிர்விக்க பயன்படுத்தும் கருவிகள் மூலம் பரவக்கூடும்.

பாஸல் நகரில் தொறு அதிகம் பரவும் பகுதியிலுள்ள கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கூலிங் டவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அப்போது, இரண்டு அலுவலகங்களில் உள்ள கூலிங் டவர்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் இந்த லீஜியோனெல்லா கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆகவே, ஒரு உயிர் பலியானதற்கு அந்த அலுவலகத்தின் கவனக்குறைவு காரணமாக அமைந்துவிட்டதால், நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கை குற்றவியல் வழக்காகக் கருதி வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.