தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக பதுங்குவது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி
9 ஆவணி 2026 ஞாயிறு 06:21 | பார்வைகள் : 430
தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தால் திமுக ஏற்றுக்கொள்ளுமா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக பதுங்குவது ஏன்? என அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி: தொகுதி மறுசீரமைப்பு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இது மாநில பிரச்னை. மாநில உரிமை குறித்த பிரச்னையில் அவர்கள் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது அவர்களது அக்கறையின்மை. காவிரியை யாரும் திசை திருப்ப முடியாது. அது காட்டாற்று வெள்ளம். காவிரி விஷயத்தை திசை திருப்புவதற்கா, தொகுதி மறுவரையறை குறித்து பேசுகிறோம்.
தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தால் திமுக ஏற்றுக்கொள்ளுமா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக பதுங்குவது ஏன்? திமுக, அதிமுக புறக்கணித்திருப்பது புதிய நட்புக்கான துவக்கமாக இருக்கிறது. மாநில நலனில் அக்கறை இல்லாமல் இருப்பதை காட்டுகிறது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
இதற்கிடையே சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,
கடந்தாண்டு திமுக நடத்திய தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தவெக பங்கேற்று ஆதரவளித்தோம்; தற்போது மக்களும் அதையே தான் எதிர்பார்க்கிறார்கள்; ஆனால் திமுக கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டிருப்பது வருத்தமளிக்கிறது'', என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire