Paristamil Navigation Paristamil advert login

Saint-Denis நகர மேயர் Bally Bagayoko மீது குற்றச்சாட்டு - பொது நிதி முறைகேடு, போலி வேலை குறித்து விசாரணை கோரிக்கை!!

Saint-Denis நகர மேயர் Bally Bagayoko மீது குற்றச்சாட்டு - பொது நிதி முறைகேடு, போலி வேலை குறித்து விசாரணை கோரிக்கை!!

8 ஆவணி 2026 சனி 22:07 | பார்வைகள் : 1635


Saint-Denis நகரின் LFI கட்சியைச் சேர்ந்த மேயர் Bally Bagayoko உள்ளிட்டோருக்கு எதிராக பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், போலியான பணியிடம் தொடர்பாகவும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், Anti-Corruption அமைப்பு அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளது.அதில், Bally Bagayoko ஒரே காலகட்டத்தில் RATP நிறுவனத்தில் முழுநேர நிர்வாகப் பொறுப்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதியாகவும் இரு முழுநேரப் பதவிகளை வகித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு Bally Bagayoko தனது RATP பிரதிநிதி பதவியை இழந்தபோது, அப்போது Parti communiste நிர்வகித்த Saint-Denis நகராட்சி, அவரது adjoint பதவிக்கான கொடுப்பனவை 102 சதவீதம் உயர்த்தியதாக Le Canard enchaîné தெரிவித்துள்ளது. இது RATP நிறுவனத்தில் அவருக்கு வழங்கப்பட்ட நிர்வாகி ஊதியத்துடன் இணைந்து, பின்னர் மாதத்திற்கு 6,000 யூரோக்களைத் தாண்டிய வருமானமாக அமைந்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல்களை Bally Bagayoko அந்தச் செய்தித்தாளிடம் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parquet national financier (PNF)-க்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில், பொது நிதி முறைகேடு மட்டுமின்றி சட்டவிரோத நலன் மோதல் (prise illégale d’intérêts), சாதகமாக அணுகுதல் (favoritisme) மற்றும் விதிமுறைகளுக்கு மாறான பல பொது பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதியின்றி ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பொது பணிகளை வகிப்பது சட்டவிரோதம் என Anti-Corruption தெரிவித்துள்ளது. “இடதுசாரியாக இருந்தாலும் வலதுசாரியாக இருந்தாலும், வரிப்பணத்தை பாதித்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் புகார் அளிப்பது ஊழல் எதிர்ப்பு அமைப்பாக எங்களது கடமை” என அந்த அமைப்பின் கௌரவத் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான Éric Halphen தெரிவித்துள்ளார்.