Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்பம்: 13 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை!!

கடும் வெப்பம்: 13 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை!!

9 ஆவணி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 1601


Météo-France வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பின்படி, ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 13 மாவட்டங்களுக்கு கடும் வெப்பத்துக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் தென்கிழக்குப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Savoie, Haute-Savoie, Rhône, Isère, Drôme, Ardèche, Gard, Vaucluse, Var, Alpes-Maritimes மற்றும் Corse ஆகிய பகுதிகள் இதில் அடங்குகின்றன. மேலும் Ain பகுதி நண்பகல் முதல் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் என Météo-France தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பல பிராந்தியங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகமாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் உயரும். பல இடங்களில் 34°C முதல் 37°C வரை வெப்பநிலை பதிவாகும் நிலையில், Rhône பள்ளத்தாக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் 38°C வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தென்மேற்கு பகுதியில் 7 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Lot-et-Garonne, Tarn, Tarn-et-Garonne, Gers, Haute-Garonne, Landes, Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம். திங்கட்கிழமை நாடு முழுவதும் வெப்பம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தென்கிழக்கில் வெப்பநிலை தொடர்ந்து நிலையாக இருக்கும். இதைத் தொடர்ந்து பல பகுதிகளில் மீண்டும் கடும் வெப்ப அலை ஏற்படக்கூடும் என Météo-France எச்சரித்துள்ளது.