பிரேசில் தலைநகரில் ஹெலிகொப்டர் விபத்து - 4 பேர் உயிரிழப்பு!
9 ஆவணி 2026 ஞாயிறு 10:02 | பார்வைகள் : 481
பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் சனிக்கிழமை 08 ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் விமானி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த மூன்று பயணிகளும் கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் என கொலம்பிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
ரியோ டி ஜெனிரோவின் அடர்ந்த காடுகள் மற்றும் செங்குத்தான மலைப் பகுதியைக் கொண்ட டிஜுகா தேசிய பூங்காவிற்குள் உள்ள 'விஸ்டா சைனீசா' என்ற சீனப் கோபுரப் பகுதிக்கு அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இப்பகுதி 2011 இல் வெளியான பிரபல 'Rio' அனிமேஷன் திரைப்படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
செங்குத்தான மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் உடனடியாகத் தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த விமானி மற்றும் மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கொலம்பியாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஆறு பேர் கொண்ட குடும்பத்தினர் ரியோவிற்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire