உக்ரைன் போரில் 50,000 வடகொரிய வீரர்கள் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
9 ஆவணி 2026 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 548
உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் போரில் களமிறக்கப்படுவதற்காக ரஷ்ய நிலப்பரப்பில் 30,000 முதல் 50,000 வடகொரிய வீரர்கள் நிலை நிறுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளது.
ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்த தகவல், ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அதிகரித்து வரும் ராணுவ உறவுகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யுனைடெட் நியூஸ் என்ற உக்ரைனிய செய்தி ஊடகத்திற்கு ஜெலென்ஸ்கி வழங்கிய தகவலில், வட கொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படும் இந்த திட்டமானது உக்ரைன், ஐரோப்பிய பிராந்தியம் மட்டுமின்றி பரந்த அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரித்துள்ளார்.
நவீன போர் குறித்த ஆழமான அனுபவங்களை வடகொரிய வீரர்களுக்கு இந்த போர் நடவடிக்கை வழங்கும், அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஆயுதங்களை இதன் மூலம் பெறவும் வட கொரியா திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதனை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம்.
இது எதிர்காலத்தில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஆபத்தாக அமையலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் செயல்படுவது என்பது பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டனர். அது பின்னர் ஆயிரங்களாகவும் தற்போது பல்லாயிரக்கணக்காகவும் அதிகரித்து இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் உக்ரைனிய நிலப்பரப்பில் ஏற்கனவே வட கொரிய ஏவுகணைகள் நாங்கள் கண்டுபிடித்து இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire