Paristamil Navigation Paristamil advert login

மூன்றாவது முறையாக நேரடியாக..உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த மேற்கிந்திய தீவுகள்

மூன்றாவது முறையாக நேரடியாக..உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த மேற்கிந்திய தீவுகள்

9 ஆவணி 2026 ஞாயிறு 16:19 | பார்வைகள் : 319


2027 ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் நேரடி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி 2027 உலகக்கிண்ண தொடரில் நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை மூன்றாவது முறையாக இழந்துள்ளது.

ஒருநாள் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது.  

இந்த தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் நேரடியாக தகுதி பெறுவதற்கு கடைசியாக இருந்த இடத்தைப் பிடித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி 2019, 2023 தொடர்களில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது.

இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக குவாலிஃபயர் சுற்று விளையாட வேண்டிய நிலைக்கு மேற்கிந்திய தீவுகள் தள்ளப்பட்டுள்ளது.

1975 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்ற முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், மூன்றாவது முறையாக நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.