யாழ்ப்பாணத்தில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி!
9 ஆவணி 2026 ஞாயிறு 17:45 | பார்வைகள் : 802
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து மருதங்கேணி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அங்கு சென்ற மருதங்கேணி பொலிசார் குறித்த அது தொடர்பில் ஆய்வு செய்துள்ள நிலையில், அது இராணுவத்தினர் வெடிபொருட்களை வைத்திருக்கும் அங்கி என்றும், அதில் நீண்ட நாள் பட்ட வெடிக்க கூடிய பொருட்கள் காணப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உரிய அனுமதியை பெற்று குறித்த பொருளை அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire