Paristamil Navigation Paristamil advert login

பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை - மு.வீரபாண்டியன்

பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை - மு.வீரபாண்டியன்

10 ஆவணி 2026 திங்கள் 08:17 | பார்வைகள் : 433


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நாமக்கலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நிச்சயமாக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது நிறைவான பட்ஜெட் அல்ல. இருப்பினும் இந்த அரசு புதிய அரசு. அமைச்சர்கள் எல்லோரும் புதியவர்கள், கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை. நிதிநிலை இடம்தராவிட்டாலும், படிப்படியாக முழுவதுமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.