மெட்டா நிறுவனம் இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும்; மத்திய அரசு
10 ஆவணி 2026 திங்கள் 12:30 | பார்வைகள் : 412
மெட்டா நிறுவனம், இந்தியாவின் சட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியா வந்துள்ள மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பு பல முறை நடந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
மெட்டா நிறுவனத்தின் உள்ளடக்க கொள்கைள், வழிமுறைகள் அனைத்தும் இந்திய சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த நிறுவனம் வெறும் உறுதிமொழிகளை கோருவதை விட மாற்றம் செய்யப்படுவதை உறுதி வேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டு இந்த ஆலோசனை நடந்து வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள குழுக்களால் இந்தியாவின் கலாசாரத்தை எப்போதும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. இந்தியாவில் உள்ளடக்க மதிப்பீட்டை மேம்படுத்துவதற்கு இந்திய மொழிகள் மற்றும் கலாசார நுணுக்கங்கள் குறித்த விரிவான புரிதல் கொண்டவர்கள் மெட்டா நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார்கள். அந்த நிறுவனம் கட்டாயம் இந்திய சட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்களங்களில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. மெட்டா தளங்களில் இதுபோன்ற உள்ளடக்கங்கள் நீடிக்க அனுமதிப்பது, கடுமையான விதிமீறலாக அமையும். இதற்கு எதிராக வெறும் வாக்குறுதிகளை அளிப்பதற்கு பதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
மெட்டா நிறுவனத்தின் அல்காரிதத்தை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது என்று கூறுவது உண்மையில் தவறானது. இவ்வாறு மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire