எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசோ, முதல்வரோ பணிந்தது கிடையாது; அமைச்சர் அருண்ராஜ்
10 ஆவணி 2026 திங்கள் 13:34 | பார்வைகள் : 339
எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசோ, முதல்வரோ பணிவதற்கான சூழலே கிடையாது. தேர்தலுக்கு முன்பும் சரி எந்த வித அழுத்தம் இருந்தாலும் அந்த அழுத்தத்திற்கு எல்லாம் பயந்தது கிடையாது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: கொள்கை, மாநில உரிமை, சமூக நீதி குறித்து திமுக பேசுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் அவர்கள் ஊழல் செய்தனர். இதனால் வேறுவழி இல்லாமல் பாஜவின் பிடியில் விழும் சூழல் தான் இருக்கிறது. இதனை தான் நாம் எதிர்க்கிறோம்.
அரசியல் ரீதியாக தேர்தல் நேர கூட்டணி இல்லாமல் அவர்களுடைய கொள்கையை விட்டுக்கொடுத்து, அவர்களுடைய சுயநலத்திற்காக குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றுவதற்காக இது மாதிரி போகிறார்கள். அதுதான் வேதனை அளிக்கிறது.
எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசோ, முதல்வரோ பணிவதற்கான சூழலே கிடையாது. தேர்தலுக்கு முன்பும் சரி எந்த வித அழுத்தம் இருந்தாலும் அந்த அழுத்தத்திற்கு எல்லாம் பயந்தது கிடையாது. காவிரி விஷயம் குறித்து சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் பேசி இருக்கிறோம்.
காவிரி பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவில்லை என்ற ஒரு காரணத்திற்காக, தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை எப்படி புறக்கணிக்க முடியும். இது முக்கியம் இல்லையா? முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.
இதனை முக்கியத்துவத்தை கருதி கூட்டத்திற்கு வந்து இருக்க வேண்டும் அல்லவா?
இவ்வாறு அருண்ராஜ் கூறினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire