Paristamil Navigation Paristamil advert login

முதல் தானியங்கி விநியோக ரோபோக்களுக்கான சான்றிதழ் வழங்க அரசு அனுமதி!!

முதல் தானியங்கி விநியோக ரோபோக்களுக்கான சான்றிதழ் வழங்க  அரசு அனுமதி!!

9 ஆவணி 2026 ஞாயிறு 21:50 | பார்வைகள் : 1655


அரசு தன்னாட்சி விநியோக ரோபோக்களை தயாரித்து பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், இந்த வாகனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இவை சாலைகளில் செல்லலாம்; ஆனால் நடைபாதைகளில் செல்ல அனுமதி இல்லை.

இந்த தன்னாட்சி வாகனங்கள் அதிகபட்சமாக 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்டிருக்கலாம். மேலும், 1,000 கிலோ வரை சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த புதிய விதிமுறை, சோதனை நிலையில் இருந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவிலான தொழில்துறை உற்பத்திக்கு கொண்டு செல்ல உதவும் என்று தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

TwinswHeel நிறுவனம் ஏற்கனவே ஸ்லோவேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ளூர் தபால் சேவைகளுக்காக தனது தன்னாட்சி ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் நகர மையங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையிலும் அடிக்கடி மற்றும் தானியக்கமாக விநியோக சேவையை வழங்க முடிகிறது. வாடிக்கையாளர்கள் குறியீட்டைப் பயன்படுத்தி ரோபோவின் பெட்டகத்தைத் திறந்து தங்களது பார்சல் அல்லது கடிதத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

விநியோகத்தின் இறுதிக் கட்டமான “கடைசி கிலோமீட்டர்” மிகவும் சிக்கலானதும் செலவானதும், மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியதுமாகும். இதை எளிதாக்குவதில் தன்னாட்சி ரோபோக்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். பிரான்ஸ் இந்தத் துறையில் முன்னேறி வரும் நிலையில், சீனாவில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான தன்னாட்சி விநியோக வாகனங்கள் இயங்கி வருகின்றன; மேலும் தன்னாட்சி டக்ஸிகள், தெரு சுத்தம் செய்யும் வாகனங்கள் மற்றும் லொரிகளும் அங்கு உருவாக்கப்பட்டு வருகின்றன.