Sarcelles நகரில் கொண்டாட்ட நிகழ்வில் கத்திக்குத்து – மூவர் காயம்!!
10 ஆவணி 2026 திங்கள் 09:00 | பார்வைகள் : 1792
Sarcelles நகரில் Haïti சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தில் மூன்று ஆண்கள் காயமடைந்துள்ளனர். 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6 மணியளவில் rue du Vignolle பகுதியில் அவசர உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்ற நிலையில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென கத்தியை எடுத்துத் தாக்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியை எடுத்த நபரை Sarcelles நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்துக்கான முழுமையான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire