Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

10 ஆவணி 2026 திங்கள் 12:31 | பார்வைகள் : 398


கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான 'கஞ்ச்பானை இம்ரான் என்பவனின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான பகைமையினால் இக்கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்